யாழ்ப்பாணத்தை அடுத்து முல்லைத்தீவிலும் வாள்வெட்டு ..! ஒருவர் படு காயம்..!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட தேராவில் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாழ்வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி மாவட்ட மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

25.05.2020 அன்று புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட வள்ளுவர்புரம்கிராம இளைஞர்களுக்கும் தேராவில் கிராம இளைஞர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் வாள்வெட்டாக மாறியுள்ளது.

இந்த வாள்வெட்டு சம்பத்தின் போது தேரவில் பகுதியினை சேர்ந்த 26 ம.ஞானப்பிரகாசம் என்ற இளைஞன் வெட்டுக்காயத்திற்கு இலக்கான நிலையில் மூங்கிலாறு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளார்;.

இச்சம்பவம் குறித்து கிளிநொச்சி மாவட்ட தர்மபுரம் பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

Be the first to comment

Leave a Reply