
இலங்கையில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த பெண் ஒருவர் திடீர் மரணம்
- அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல்
- இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை
- ரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா? சவால் விடுத்துள்ள ஹரின்
- அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது
- சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது
திருகோணமலை தனிமைப்படுத்தல் நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
மங்கி பிரிட்ஜ் இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த பயாகலையை சேர்ந்த பெண்ணொருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
குவைத்தில் இருந்து நாடு திரும்பி நிலையில் குறித்த பெண் தனிமைப்படுத்தல் நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவர் இன்று அதிகாலை திடீரென சுகயீனம் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோது உயிரிழந்ததாக சீனக்குடா பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இவருடன் குவைத்தில் இருந்து நாடு திரும்பிய இரு பெண்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி நேற்று காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்
Be the first to comment