நாளை முதல் பேரூந்துகளில் சமூக இடைவெளி குறைந்தால் கடூழிய சிறைத்தண்டனை..! அஜித் பெரேரா கடும் எச்சரிக்கை..!

பேரூந்து  பயணங்களின் போது எவரேனும் ஒருவர் சமூக இடைவெளியை பேணாது  செயற்படுவார்களாயின் அவர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர்  அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளுக்கமைய நாளை முதல் இந்த நடவடிக்கை  கடுமையாக பின்பற்றப்படும் எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,” எவரேனும் ஒருவர்  சமூக இடைவெளியை பேணாது பேரூந்துகளிலோ அல்லது பேரூந்துகளுக்காக  வரிசையில் காத்திருப்பார்களாயின் அவர்கள்  கைது செய்யப்படுவார்கள்.

நாளைமுதல் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முன்னெடுக்கப்படவுள்ளது.

எனவே நாளை முதல்  இந்த நடவடிக்கை  கடுமையாக பின்னபற்றப்படும். இவ்வாறு கைது  செய்யப்படுபவர்கள்  கடூழிய சிறைத்தண்டனைகளுக்குட்படுத்தப்படுவார்கள். என்பதை நான் இந்த இடத்தில் ஞாபகப்படுத்திக்கொள்கின்றேன்” என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply