விடுதலைப்புலிகளின் தலைவரை ஒருமையில் விமர்சித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி காண்டீபன்..!

விடுதலைப்புலிகளை மிகவும் மோசமாக விமர்சிக்கும் நிலை அண்மைக் காலமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதத்தை தூக்கு”றான்”….ரணிலும் போய் கையெழுத்து வைக்கி”றார்” பிரமதாசாவும் பேச்சுவார்த்தைக்கு போ”றார்” வார்த்தைகள் முக்கியமானவை அத்தோடு பேசும் விடயங்களும் விமர்சனத்துக்குரியவை.

தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டமானது புலம் பெயர் உறவுகளின் நிதியிலும் உள்ளூர் மக்களின் பங்களிப்புடனுமே கட்டியெழுப்பப்பட்டது அவர்கள் ஒரு போதும் மகிந்த ராஜபக்சவுடனோ பசீல் ராஜபக்சவுடனோ டீல் பேசி பணம் பெற்று தங்கள் போராட்டத்தை கொண்டு நடத்தவோ அமைப்பை கட்டமைக்கவோ வேண்டிய தேவை இருக்கவில்லை.

புலிகள் மகிந்தவிடம் பணத்தை பெற்றுக்கொண்டுதான் ரணில் அரசாங்கத்தை கவுட்டு மகிந்த அரசினை கொண்டுவந்து தமிழ் மக்களின் அழிவுக்கு காரணமாக இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டினை புலிகள் மீது புலியெதிர்ப்பாளர்கள் தொடர்ச்சியாக முன்வைத்துக்கொண்டு வந்தார்கள்.

ஆனால் புலிகள் தெளிவாக தம்முடைய விளக்கத்தை கூறியிருந்தனர். இலங்கையின் ஜனாதிபதி யார் என்பது குறித்து நாம் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை எமக்கு ரணிலும் ஒன்றுதான் சந்திரிக்காவும் ஒன்றுதான் மகிந்தவும் ஒன்றுதான் அனைவரும் பேரினவாத சிந்தனை கொண்டவர்கள்தான் ஆதலால் ஜனாதிபதி தேர்தல் குறித்து நாம் அக்கறை கொள்ளவில்லை. 

நாம் எப்போதும் மகிந்தவுடன் ஒப்பந்தம் செய்து பணம் வாங்கிக்கொண்டு தமிழ் மக்களை தேர்தலை புறக்கணிக்க கூறவில்லையென்றே கூறினார்கள்.

இன்று அதே புலியெதிர்ப்பாளர்களின் கூற்றை தீவிர தமிழ் தேசியம் பேசும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணியும் தமது கூற்றாக கொள்கை விளக்கமாக கூறுகிறது. 

இது அர்ப்பணிப்பு நிறைந்த புலிகளின் போராட்டத்தை பணத்திற்கு விலைபோன போராட்டமாக சித்தரிக்கவும் புலிகளே பணத்திற்காக மகிந்தவை ஆட்சிக்கு கொண்டுவந்தனர் இனப்படு கொலைக்கு காரணமாக இருந்தனர் என்று கூறுவதற்கு ஒப்பானதாகும்.

புலிகள் பலமாக இருந்த அச்சந்தர்ப்பத்தில் பசில் ராஜபக்ச என்றால் யாரென்றே தெரியாத அச்சந்தர்ப்பத்தில் புலிகள் எவ்வாறு பசிலோடு டீல் பேசி பணம் பெற்றிருக்கமுடியும்? 

மகிந்த ஆட்சியேற்று பசில் அமைச்சராகிய பின்பு குறிப்பாக 2009 இல் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுமானால் பசீலோடு டீல் பேசி வெள்ளைக்கொடியோடு சரணடைந்தவர்களை சுட்டுக்கொல்ல வழியேற்படுத்திக்கொடுத்திருந்திருக்கலாம் ஒருபோதும் புலிகள் டீல் பேசவும் இல்லை பணம் பெறவும் இல்லை. 

அதற்கான தேவையும் அவர்களுக்கு இருக்கவில்லை.

தாங்கள் சொல்வதுதான் வரலாறு தாங்கள் பேசுவதுதான் தமிழ் தேசியம் என்ற மமதையோடு கஜேந்திரகுமார் அணி மற்றும் சுமந்திரன் அணிகள் மீண்டும் மீண்டும் புலிகளை மலினப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. 

ஏற்கனவே புலிகள் அமைப்பில் இளைஞர்கள் உணவுக்கு வழியின்றித்தான் இணைந்தனர் என கஜேந்திரகுமார் ஜெனீவாவில் வைத்தும் கூறியிருந்தார்.

மேலும் இன்னொரு விடயத்தையும் இங்கு குறிப்பிடவேண்டும் சிங்கள அரச தலைவர்களின் பெயர்களை கூறும் போது மரியாதையாக “ர்” சேர்த்துச்சொல்லும் காண்டீபன் விடுதலைப்புலிகளின் தலைவரின் பெயரை சொல்லும் போது “ன்” சேர்த்து மிகவும் மட்டமாக சொல்கின்றார் என மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

இவ்வாறு அண்மைக்காலங்களில் சுமந்திரன் அணியும் கஜேந்திரன் அணியும் புலிகளை விமர்சனத்திற்கு எடுத்திருப்பது மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிகின்றது.

1 Comment

  1. It’s a long time issue. If anybody clarify this issue, it will be much beneficial for the Tamils especially students and learners.

Leave a Reply