ஹெரோயினுடன் கபடி விளையாடிய முன்னாள் இலங்கை கிரிக்கட் அணி வீரர் கைது..!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.


குருநாகல் – பன்னல பிரதேசத்தில் வைத்து குறித்த வீரர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 2.7 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த நபர் கடந்த பல ஆண்டுகளாக ஹெரோயினுக்கு அடிமையானவர் என தெரிவித்துள்ள பொலிஸார் அவரை நீதிமன்றிலும் ஆஜர்படுத்த உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
எனினும் இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் பற்றிய மேலதிக தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

Be the first to comment

Leave a Reply