பொலிசாருக்குள்ளும் கொரோணா அச்சம்..! 141 பேர் தனிமைப்படுத்தல்..!

விடுமுறைகளில் வீடுகளுக்கு சென்று திரும்பிய மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றி வரும் 141 காவல்துறை உத்தியோகத்தர்களை கல்லடி காவல்துறை பயிற்சி முகாமில் தனிமைப்படுத்த ப்பட்டுள்ளதாக இன்று திங்கட்கிழமை (25) காவல்துறை  உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 காவல்துறை நிலையங்களில் கடமையாற்றிவரும் காவல்துறை  உயர் அதிகாரி தொடக்கம் சாதாரன காவல்துறை உத்தியோகத்தர் வரையில் தமது விடுமுறையில் வீடுகளுக்கு சென்று மீண்டும் கடமைக்கு திரும்பிய நிலையில்; கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் கீழ் அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது  


இதற்கமைய விடுமுறையில் வீடுகளுக்கு சென்று இன்றுவரை திரும்பிய 141 பேரை 7 நாட்களுக்கு கல்லடியிலுள்ள காவல்துறை பயிற்சி முகாமில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார். 

Be the first to comment

Leave a Reply