அங்கீகரிக்கப்பட்ட நட்சத்திர விடுதிகள் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் தங்கள் சேவைகளைத் தொடர அனுமதி..!

கொழும்பில் நாளை முதல் சுற்றுலா மேம்பாட்டு அதிகார சபையால் அங்கீகரிக்கப்பட்ட நட்சத்திர விடுதிகள் (ஹோட்டல்கள்) மற்றும் உணவகங்கள் தங்கள் சேவைகளைத் தொடர அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை கொழும்பு பிரதான சுகாதார மருத்துவ அதிகாரி மருத்துவர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கும் போது, கொழும்பு நகரத்தில் நாளை முதல் சேவைகளைத் தொடங்க இந்தத் துறைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முறையான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுகிறதா என விசாரிக்க ஆறு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர் ருவன் விஜயமுனி கூறினார்.

Be the first to comment

Leave a Reply