கேள்விக்குறியாகி வரும் யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு நிலவரம்..!

ஊரடங்கு யாருக்கு என்ற கேள்வியும் எழுகின்றது?

இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் யாழ்மாவட்டத்தில் சேவையாற்றும் ஒரு வைத்தியர்..!

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு வேளையில் ரவுடிகளும் வன்முறைக் கும்பல்களும் வாகனங்களில் வாள்கள், கொட்டன்கள், கோடரிகளுடன் திரிகிறார்கள். களவு ,வீட்டை அடித்து நொருக்குதல் ,வாளால் வெட்டுதல் போன்ற அராஜகங்களில் பயமில்லாமல் ஈடுபடுகிறார்கள்.

மறுபுறத்தே ஊரடங்கு வேளையில் முட்டு வருத்தம் கூடி வைத்தியசாலை செல்ல வாகனம் கிடைக்காமல் இறந்த சம்பவமும் அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்தது.

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பா மல்லாகத்தில் நேற்று சட்டத்தரணி ஒருவரின் வீட்டில் நுழைந்த ரவுடிக் கும்பல் வீட்டை அடித்து நொருக்கி விட்டு சென்றுள்ளார்கள்.

இவர்களுக்கு துணிவு எவ்வாறு வருகின்றது.????? பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று தாங்கள் பிடிபட்டாலும் உடனடியாக வெளி வந்து விடலாம் என்பது. இதற்கு உதாரணமாக எங்கள் வைத்தியசாலையில் நடந்த சம்பவத்தை கூற முடியும். வைத்தியசாலையில் நுழைந்து அச்சுறத்தலில் ஈடுபட்டவர்களை பிடிக்க போலிசுக்கு அழைப்பை எடுத்த போது அவர்கள் பயமில்லாமல் சொன்னது , இரு நாளில் வெளி வந்து விடுவோம் மீண்டும் வருவோம் என்பதாகும். இதை சம்பந்தப்பட்ட தரப்புகள் புரிந்து கொள்ள வேண்டும்.

கத்திக்கு எல்லாப் பக்கமும் கூர்தான். அதுக்கு வெட்ட மட்டும் தான் தெரியும். அவ்வாறே இந்த வாள் வெட்டு ரவுடிகளும். ஆட்டை கடித்து மாட்டை கடித்து பின் துணிந்து மனிதனைக் கடித்த கதையே தற்போது நடந்துள்ளது. இதுவே மதிப்பு மிக்க சட்டத்தரணியின் வீட்டில் புகுந்து தாக்குதல் நடத்தும் அளவுக்கு வந்துள்ளது. மேலும் ரவுடிகள் கஞ்சாவும் அடித்து விட்டு வாகனங்களில் விரைவாக செல்லும் போது வீதியில் எதிரே மாட்டுப்படுவது யாருடைய குடும்பமாகவும் இருக்கலாம் என்பதை அனைத்துத் தராப்புகளும் உணர வேண்டும்.

தாங்கள் கைது செய்யப்பட்டால் தங்களை பிணையில் எடுக்க வரமாட்டார்கள் விளக்க மறியலிலேயே காலத்தை கழிக்க வேண்டும் என்பதை உணர்ந்தாலே பல ரவுடிகள் அடங்கி விடுவார்கள். சம்பந்தப்பட்ட தரப்புகள் இனியாவது உணர்வார்களா?

இல்லா விட்டால் ஏதோ ஒரு காலத்தில் ரவுடியின் கத்திக்கு வேறுபாடின்றி யாரும் இலக்காகலாம்.

உழைத்து வாழ பஞ்சி பிடித்த வீட்டுக்கும் நாட்டுக்கும் உதவாத ஈனப் பிறவிகளை ஊரடங்கை சாட்டாக வைத்தாவது சுட்டு தள்ளினாலும் நாடு உருப்படும்.

இவ்வாறு அவரது பதிவு காணப்படுகின்றது.

ஜனாதிபதி அவர்களே இது உங்களின் கவனத்திற்கு..!

Be the first to comment

Leave a Reply