கிரிக்கட் வீரரையும் விட்டுவைக்காத கொரோணா..!

கொரோனா வைரஸ் பாதிப்பு முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் தௌபீக் உமருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை அவரே நேரடியாக ஒரு தொலைக்காட்சிக்கு பேசி உறுதி செய்துள்ளார். மேலும், அவர் தான் இந்த நோயில் இருந்து மீள அனைவரும் வேண்டிக் கொள்ளுமாறு உருக்கமான வேண்டுகோள் வைத்துள்ளார்.

தௌபீக் உமர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் நான்காவது கிரிக்கெட் வீரர் ஆவார்.

இதுவரை மூன்று கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. சபார் சர்ப்ராஸ் என்ற முன்னாள் பாகிஸ்தான் வீரர், மஜித் ஹக் என்ற ஸ்கொட்லாந்து வீரர் மற்றும் சோலோ நிக்வேனி என்ற தென்னாபிரிக்க வீரருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.

இந்த நிலையில், நான்காவதாக முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் தௌபீக் உமர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அவரே பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றில் உறுதி செய்துள்ளார். மேலும், வேண்டுகோளும் வைத்துள்ளார்.

தனக்கு கடந்த சனிக்கிழமை லேசாக காய்ச்சல் இருந்ததாகவும், அதைத் தொடர்ந்து தான் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொண்டதாகவும், அதன் முடிவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி ஆனதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், தனக்கு நோய்க்கான அறிகுறிகள் தீவிரமாக இல்லை எனவும் கூறி உள்ளார்.

தான் தற்போது தன் வீட்டில் தனிமையில் இருப்பதாகவும் அவர் கூறி உள்ளார். மேலும், தான் விரைவில் குணமாக வேண்டும் என அனைவரும் வேண்டிக் கொள்ளுமாறும் அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்

Be the first to comment

Leave a Reply