கிளிநொச்சியில் இருவரை வெட்டி சாய்த்து பிரதேசத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த வாள் வெட்டுக்குழு..! அதிர்ச்சி ரிப்போர்ட்..!

இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை மாலை 6.20 க்கு வந்தவர்கள் 7.15 வரை அந்தப் பகுதியை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு வீடுகளில் இருந்து பெண்கள், சிறுவர்கள் அனைவரும் வயல்களுக்கு தப்பி ஓடிவிட்டதாகவும் இல்லையெனில் அவர்களும் வாள் வெட்டுக்கு உள்ளாகியிருப்பார்கள் என்றும் பாதிக்கப்பட்ட நபர்கள் தெரிவித்தனர்.

வாள் வெட்டுக்கு இலக்கானவர் உடனடியாக அவசர நோயாளர் காவு வண்டி மூலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து வைத்தியசாலை பொலீஸார் ஊடாக வாக்குமூலத்தை பதிவு செய்து கிளிநொச்சி பொலீஸ் நிலையத்திற்கு வழங்கியதனை தொடர்ந்து கிளிநொச்சி பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். இதுவரையும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

Be the first to comment

Leave a Reply