கொரோணா தொடர்பான ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்ட புதிய தகவல்..!

கொரோனா நோயாளிகள் நோய்வாய்ப்பட்ட 11 நாட்களுக்குப் பிறகு நோய்தொற்றை உறுதிசெய்தாலும் அவர்களிடமிருந்து மற்றொருவருக்கு நோய் பரவாது என சிங்கப்பூரில் தொற்று நோய் நிபுணர்களின் புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சோதனையில் நோய் இருப்பது உறுதியானாலும் அவர்களுக்கு சத்தியமான வைரஸ் பாதிப்போ அல்லது நோய்த்தொற்றை மற்றொருவருக்கு பரப்பவோ முடியாது என சிங்கப்பூரின் தொற்று நோய்களுக்கான தேசிய மையம் மற்றும் மருத்துவ அகாடமி மேற்கொண்ட கூட்டு ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோயாளிகள் நோய்வாய்ப்பட்ட 11 நாட்களுக்குப் பிறகு வைரஸை தனிமைப்படுத்தப்படவோ அல்லது வளர்க்கவோ முடியவில்லை என குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் 73 நோயாளிகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்திய கண்டுபிடிப்புகள் நாட்டின் நோயாளிகள் டிஸ்சார்ஜ் கொள்கையில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.

சமீபத்திய உள்ளூர் மற்றும் சர்வதேச மருத்துவ அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் தற்போது கொரோனா நோயாளிகளை சிங்கப்பூர் நிர்வகிக்கிறது.

இதுவரை, சிங்கப்பூரில் மொத்தம் 31,068 கொரோனா நோயாளிகளில் 13,882 அல்லது 45 சதவீதம் பேர் மருத்துவமனைகள் மற்றும் சமூக வசதிகளிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சிங்கப்பூர் சனிக்கிழமை நண்பகல் வரை 642 புதிய கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன

Be the first to comment

Leave a Reply