
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், பல லட்சம் மக்கள் பலியாகியுள்ளனர். இதனால் பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளதால் பொருளாதாரமும் சரிவை சந்தித்துள்ளது. உலக நாடுகள் பல கொரோனாவுக்கு எதிரான மருந்தை கண்டறிய தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.
- அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல்
- இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை
- ரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா? சவால் விடுத்துள்ள ஹரின்
- அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது
இந்நிலையில். தடுப்பு மருந்தின் முதற்கட்ட பரிசோதனை வெற்றியடைந்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது. Ad5 – nCov என பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்தை சீனாவில் உள்ள 108 தன்னார்வலர்களுக்கு பரிசோதித்ததில் அது வெற்றியடைந்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
மேலும், இந்த மருந்து சார்ஸ் வைரஸுக்கும் மருந்தாக பயன்படக்கூடியது என கூறப்பட்டுள்ளது. முதற்கட்ட சோதனை வெற்றியடைந்ததை தொடர்ந்து இரண்டாவது கட்டமாக 501 பேருக்கு இந்த மருந்தை பரிசோதிக்க இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் இந்த கண்டுபிடிப்பு கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் முன்னேற்றத்தை அளித்திருப்பதாக கூறப்படுகிறது.
Be the first to comment