இந்த 6 அறிகுறி வர ஆரம்பித்து விட்டால் உங்களுக்கு சர்க்கரை நோய் வரப் போகின்றது என்று அர்த்தம்..!

இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் நீரிழிவு நோய்க்கு ஆளாகியுள்ளனர். இது பலதரப்பட்ட மக்களுக்கும் எளிதாக வருவது ஒரு வாடிக்கையாகிவிட்டது. இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய ஒரு சில அறிகுறிகள் நமக்குத் தென்படும். அதை வைத்து அறிந்துகொள்ளலாம் என கூறுகிறார்கள். அதைப்பற்றிய தற்பொழுது பார்க்கலாம்

உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 42 கோடி மக்கள் நீரிழிவு நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இதில் பாதிக்கப்பட்ட பலருக்கும் நீரழிவு நோயின் தாக்கத்தை அவர்களால் இன்னும் உணர முடியவில்லை என்று கூறுகிறார்கள். நீரழிவுநோய் பலவிதமான உடல் பிரச்சினைக்கும் காரணமாக அமைகிறது. நீரிழிவு நோய் முக்கியமாக நமது ரத்த நாளங்களை பாதிக்கிறது. நரம்பியல் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

இன்னும் பல விதமான உடல் உறுப்புகளுக்கும் பாதிப்புகளை கொண்டு வந்து சேர்க்கிறது. இந்த நோய்க்கு எதிராக போராட ஒரே ஒரு வழி, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்திருப்பது மட்டும்தான்.

முக்கியமாக இந்த நீரிழிவு நோய் நமக்கு ஏற்படும் முன்பு நமக்கு சில அறிகுறிகள் தென்படும். அந்த அறிகுறிகள் தென்படும் போதே நாம் அதை சோதித்து உடனடி சிகிச்சை எடுத்து நோயை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்

. எதிர்காலத்தில் இந்த நோய் மூலம் பேரழிவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியம். இப்பொழுது அந்த நோய் ஏற்படுவதற்கு முன் தென்படும் சில அறிகுறிகளைப் பற்றி பார்க்கலாம்.

​அடிக்கடி சிறுநீர் வெளியேறுதல்

samayam tamil

ரத்தத்தில் அதிகமான சர்க்கரை இருப்பவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறும் என்று கூறுகிறார்கள். சாதாரணமாக தண்ணீர் அதிகமாக குடித்தால் சிறுநீர் அடிக்கடி வெளியேறுவது வழக்கம். ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அதை விட அதிகமாக சிறுநீர் வெளியேறிவிடும் என்று கூறுகிறார்கள். சாதாரண மனிதர்கள் ஒரு நாளைக்கு 4 முதல் 7 முறை சிறுநீர் கழிப்பார்கள் என்றும் ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதிலிருந்து இரு மடங்கு அதிகமான சிறுநீர் கழிப்பார்கள் என்றும் கூறுகிறார்கள். இது கிட்னியில் உள்ள பிரச்சனை. நமது கிட்னி ஆனது அளவுக்கதிகமான சர்க்கரையை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால் இது போல் செயல்படும் என்று கூறுகிறார்கள் அந்த சர்க்கரையை சிறுநீர் மூலம் வெளிப்படுத்தும்.

​சோர்வு

samayam tamil

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் நாள்முழுவதும் அதிகமான நேரங்களில் சோர்வாகவே நமக்கு இருக்கும். எந்த வேலையும் செய்வதற்கு நம்மால் முடியாது. உட்கார்ந்துவிட்டால் எழுந்து அடுத்த வேலையை செய்வதற்கு நமக்கு மிகவும் சோர்வாக இருக்கும். எப்பொழுது சாப்பிட்டு முடித்தாலும் மிகவும் சோர்வாக காணப்படும். குறிப்பாக அதிகமான கார்போஹைட்ரேட் நிறைந்த உணவை சாப்பிடும் பொழுது இன்னும் அதிகமான சோர்வு ஏற்படும். இப்படி ஏற்பட்டால் நிச்சயமாக உங்களை நீங்கள் பரிசோதித்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

​தாகம் அதிகரிக்கும்

samayam tamil

சர்க்கரை அதிகமாக உள்ளவர்களுக்கு அதிகமான அளவில் சிறுநீர் வெளியேறும் என்று கூறினோம் அப்படி வெளியேறும் பொழுது அவர்களுக்கு தாகமும் அதிகரிக்கும். அதிகமாக உடலில் இருந்து நீர் சத்து வெளியேறுவதால் உடலுக்கு இன்னும் அதிகமான நீர் தேவைப்படுகிறது. எனவே உடலுக்கு தாகம் அதிகரிக்கும். இது ஒரு முடிவில்லாத சுழற்சியை போல் நடந்து கொண்டே இருக்கும். நீங்கள் அதிகமாக தண்ணீர் குடிக்கும் போது அதிகமாக சிறுநீர் வெளியேறும். இப்படி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். இது தான் நீரழிவு நோயின் ஆரம்பகட்ட அறிகுறி என்று கூறுவார்கள்.

​கண் பார்வை மங்குதல்

samayam tamil

கண்பார்வை மங்குதல் என்பது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கான மற்றொரு அறிகுறியாகும். இது மிகவும் ஆரம்ப காலத்திலேயே தென்படும். திடீரென்று நமது பார்வையில் சில மாற்றம் ஏற்படும். பார்வை தெளிவாக இல்லாமல் சற்று மங்கலாக இருக்கும். இது உடலில் உள்ள அதிகமான சர்க்கரையின் அளவு நம்மை இப்படிச் செய்கிறது. உடலில் உள்ள தேவையற்ற சர்க்கரை மற்றும் தண்ணீரானது நம் கண்களின் நடுவே வந்துவிடும். இதனாலேயே நம் பார்வை மங்கலாக இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

​தலைவலி

samayam tamil

நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு முன் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் தலைவலி அடிக்கடி ஏற்படும் என்று கூறுகிறார்கள். தலைவலி ஏற்படுவதற்கு பலவிதமான காரணங்கள் கூறப்பட்டாலும் மேலே உள்ள காரணங்களோடு தலைவலியும் உங்களுக்கு அடிக்கடி ஏற்பட்டிருந்தால் நிச்சயமாக நீங்கள் உங்களை பரிசோதித்துக்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.

​நோய்தொற்று

samayam tamil

சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளவர்களுக்கு நோய்தொற்று மிகவும் எளிதாக ஏற்பட்டுவிடும். சிறிய சிறிய பருவநிலை மாற்றம் முதல் இது ஆரம்பமாகிறது. பருவநிலை மாற்றம் முதல் சிறிய சிறிய காரணங்களுக்கும் இன்பெக்சன் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு முக்கிய காரணமாக அமைவது உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் நம் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியை குறைத்து விடுகிறது. இதனால் நமது உடல், கிருமிகளுக்கு எதிராக போராட மிகவும் கஷ்டப்படுகிறது. இதனால் அடிக்கடி நோய்த்தொற்று ஏற்பட்டு வேறுவிதமான வியாதிகளும் வந்துவிடுகிறது.

மேலே குறிப்பிட்ட அறிகுறியானது மிகவும் ஆரம்பகால அறிகுறியே. இவைகள் மிகவும் அதிகமாக தென்படுவதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகி உங்கள் நீங்கள் முழுமையாக பரிசோதித்துக் கொள்வது மிகவும் அவசியம். ஆரம்ப நிலையிலேயே நாம் பரிசோதித்து அதற்கான நடவடிக்கை எடுத்து விட்டால் எதிர்காலத்தில் தீவிரம் அடைவது குறையும்.

Be the first to comment

Leave a Reply