பொலிசாருக்கு எதிராக வாதாடிய சட்டத்தரணியின் வீட்டில் வாள் வெட்டு..! வாள் வெட்டை இயக்குவது யார்???

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட தனிமைப்படுத்தல் வழக்கிலிருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களை நீக்குவதற்கு வாதாடிய ஒரு சட்டத்தரணியின் வீட்டிற்கே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

முன்னணி உறுப்பினர்களின் தனிமைப்படுத்தல் வழக்கிற்கு எதிராக வாதாடிய சட்டத்தரணிகளில் ஒருவர் ஏற்கனவே படையினரால் அச்சுறுத்தப்பட்டிருந்த நிலையில்,

இன்னுமொரு சட்டத்தரணியான றோய் டிலக்சன் வீட்டிற்கு வாள்களுடன் சென்ற கும்பல் அவரது வீட்டையும், மோட்டார் சைக்கிளையும் வெட்டி சேதப்படுத்தியுள்ளனர்.

இதன் தொடரச்சியாக வாள்வெட்டுக்கும்பல்களை இயக்குவதும் பாதுகாப்பதும் யாராக இருக்கும் என மக்கள் விசனம் அடைந்துள்ளனர் என்று எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply