கொரோணா பிறப்பிட வூஹான் மையத்தலைவர் வெளியிட்ட செய்தி உண்மையா..?

கொரோனா வைரஸைக் இணத்துடன் வௌவாலிருந்து கண்டறியப்பட்ட வைரஸிகள் எதுவும் பொருந்தவில்லை என கொரோனா முதன்முதலில் தோன்றிய வுஹான் நகரத்தில் உள்ள வைராலஜி மையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

வுஹானில் முதன்முதலில் தோன்றிய கொரோனா உலகளவில் சுமார் 3,40,000 மக்களைக் கொன்றது. வெளவால்களில் தோன்றிய இந்த வைரஸ் மற்றொரு பாலூட்டி வழியாக மக்களுக்கு பரவியிருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.


ஆனால், கொரோனா வுஹானில் உள்ள வைராலஜி ஆராய்ச்சி மையத்திலிருந்து கசிந்திருக்கக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் பிறர் கூறிய கூற்றுக்கள் புனைகதை என்று வுஹான் வைராலஜி மையத்தின் தலைவர் (www.dailysri.com) வாங் யானி கூறினார்.


குறித்த நிறுவனத்தில் வெளவால்களிடமிருந்து சில கொரோனா வைரஸ்களை கண்டறிந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.


இப்போது எங்களிடம் மூன்று வைரஸ்கள் உள்ளன. ஆனால் 3 வைரஸ்களும் கொவிட்-19 உடன் 79.8 சதவிகிதத்தை ஒற்றுமை மட்டுமே அடைகிறது என்று அவர் கூறினார்.

Be the first to comment

Leave a Reply