இலங்கையில் கொரோணா திடீர் அதிகரிப்பு ஏன்..!

இலங்கையில் அண்மைய நாட்களாக கொரோனா தொற்றாளர்கள் குறைவடைந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது.

இலங்கையில் திடீரென கொரோனா தொற்றாளர்கள் அதிகரிக்க வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படும் இலங்கையர்களே காரணமென சுகாதார அமைச்சு தெரிவித்தள்ளது.

இந்த நிலையிலேயே சுகாதார அமைச்சு தொற்று அதிகரிப்புக்கான காரணம் குறித்து மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

அண்மைய நாட்களாக இந்தோனேசியா, பங்களாதேஷ் மற்றும் டுபாய் ஆகிய நாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்கள் அழைத்து வரப்படுகின்றனர். இவ்வாறு அழைத்து வரப்படுபவர்களில் சிலருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதனாலேயே கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

இன்றையதினம் இதுவரை 1138 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.புதிதாக 49 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதில் 28 பேர் குவைத் நாட்டிலிருந்தும் ஒருவர் இந்தோனேசியாவிலிருந்தும் வருகை தந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply