ஊரடங்கினால் லாபம்தான்.. பேஸ்புக் நிறுவனர் சொத்துமதிப்பு எவ்வளவு அதிகரிப்பு தெரியுமா..?

பேஸ்புக்  உலக அளவில் அதிக பயனர்களைக் கொண்ட நிறுவனம் ஆகும். ஸ்மார்ட்போன் பயன்படுத்தாத இளைஞரைப் பார்ப்பது எவ்வளவு கடினமோ அவ்வளவு கடினம் பேஸ்புக் அக்கௌண்ட் இல்லாத இளைஞரைப் பார்ப்பதும் ஆகும்.

ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தாத பயனர்களைத் தவிர மற்ற அனைவரும் பேஸ்புக் குடும்பத்தில் ஒருவராகவே இருப்பர், பல ஆண்டுகளைக் கடந்தபோதிலும் பேஸ்புக்கினை இரண்டாவது இடத்திற்குத் தள்ள எந்த பயன்பாடும் வரவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக உலகின் பல நாடுகளில் ஊரடங்கானது பிப்ரவரி மாதத்தில் இருந்தே பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே உள்ளனர். இதனால் டிவி பார்ப்பது, இணையத்தினை பயன்படுத்துவது எனப் பொதுமக்கள் இருந்து வருகின்றனர்.

டிவி பார்ப்போரைவிட, இணையத்தினைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையானது அதிகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் பேஸ்புக்கின் பயன்பாடானது, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் 60 சதவீதம் அதிகரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ஜனவரி மாதத் துவக்கத்தில் அமெரிக்காவில் அதிகரித்த இதன் பயன்பாடானது, தற்போது வேறு லெவலாக அதிகரித்துள்ளது.

பல நிறுவனங்களும் பொருளாதார வீழ்ச்சியினை சந்தித்துவரும் நிலையில், ஃபேஸ்புக்கின் மார்க் ஜூக்கர்பர்க் இந்த இரண்டு மாதங்களில் 45 % அதிகமாக லாபம் அடைந்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது மார்க் ஜூக்கர்பர்க் சொத்து மதிப்பு 45% அதிகமாக உயர்ந்து 6.07 லட்சம் கோடியினைத் தொட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Be the first to comment

Leave a Reply