பூநகரி பால வேலை ஆரம்பம் பாலத்தை கழற்றிய விசமிகள் கைது செய்யப்படவில்லை- மக்கள் அதிருப்தி..!

பூநகரி குடமுருட்டி பாலத்தின் திருத்தப் பணிகள் தற்போது இடம்பெற்று வருகிறது. குற்றவாளிகள் கைது செய்யப்படாமை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

கிளிநொச்சி பரந்தன் பூநகரி வீதியில் 14 வது கிலோ மீற்றரில் அமைந்துள்ள குடமுருட்டி பாலத்தின் இரும்புகள் விசமிகளால் திருடப்பட்டுள்ளமையால் பாலத்தின் ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதன் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொழும்பிலிருந்து கொண்டுவரப்பட்ட பாலத்தின் பாகங்களை பொருத்தும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகிறது. திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டும் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படாமை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

Be the first to comment

Leave a Reply