பஸ் கட்டணங்களின் மாற்றம் தொடர்பாக தனியார் சேவையாளர் கோரிக்கை..!

தனியார் பஸ் கட்டணங்களை ஒன்றரை மடங்கில் அதிகரிக்குமாறு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எனினும் அவர்களின் இந்த கட்டண அதிகரிப்புக்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த சமரவீர தெரிவித்தார்.

இதேவேளை வரும் செவ்வாய்க்கிழமை முதல் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் இருந்து பஸ் போக்குவரத்தினை வழமைபோல ஆரம்பிக்க அனுமதிக்கப்படுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply