பிரித்தானியாவிலிருந்து கொரோணா விலகும் காலம் கணிப்பு..!

பிரித்தானியாவில் ஜுன் மாதத்திற்குள் கொரோனா வைரஸ் காரணமாக எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்பட்டிருக்காது எனவும், இது எப்போது நாட்டை விட்டு விலகும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் மட்டும் 254,195 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 36,393 பேர் உயிரிழந்துள்ளனர். பிரித்தானியா இப்போது கொரோனாவின் நான்காம் கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா வைரஸால் சமீபத்தில் ஏற்படும் உயிரிழப்புகள் குறைவாக தெரிந்தாலும், இதை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதற்காக, நாட்டில் இன்னும் ஊரடங்கு அமுலில் உள்ளது. ஒரு விதிமுறைகள் மட்டுமே தளர்த்தப்பட்டுள்ளது.

இதனால் இந்த கொரோனா வைரஸ் எப்போது தான் போகும், இதற்கு எப்போது தான் தடுப்பூசி கண்டுபிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்து வருகிறது.

இந்நிலையில், சிங்கப்பூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், அதாவது சிங்கப்பூர் ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸின் தரவு பட்டியலை மதிப்பீடு செய்து, அதற்கு ஒரு மொடலிங் முறையை பயன்படுத்தி, பிரித்தானியா எப்போது கொரோனா வைரஸிலிருந்து விடுபடும் என்று கணித்துள்ளனர்.

அதில், செப்டம்பர் மாதத்திற்குள் பிரித்தானியா கொரோனா வைரஸில் இருந்து விடுபடும் எனவும், ஜுன் மாததிற்குள் கொரோனாவால் எந்த ஒரு உயிரிழப்புகளும் இருக்காது என்று கணிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நவம்பர் மாதம் 11-ஆம் திகதி வரை கொரோனாவில் இருந்து விடுபடாது என்று கூறப்பட்டிருந்த நிலையில், பிரித்தானியா அதற்கு முன்னரே கொரோனாவில் இருந்து விடுபடும் என்று குறிப்பிட்டுள்ளது.

மற்ற நாடுகளை விட, இத்தாலி மற்றும் சிங்கப்பூர் ஆகியவை முதலில் இந்த நோயை முடக்க உள்ளன. அங்கு நெருக்கடி முறையே ஆகஸ்ட் 12 மற்றும் ஜூலை 19-க்குள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் முன்னணி பேராசிரியர் ஒருவர், பிரித்தானியாவின் இறப்பு விகிதங்கள் குறைந்து வருவதுடன் ஜூன் இறுதிக்குள், எந்தவிதமான இறப்புகளும் பதிவு செய்யப்படாத நிலையை எட்டக்கூடும் என்று கணித்துள்ளார்.

மேலும், சிங்கப்பூர் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு ஆய்வகம் கணிப்பு நிச்சயமற்றது, இது காலப்போக்கில் மாறலாம் என்று கூறப்படுவதால், மக்கள் சற்று எச்சரிக்கையுடனே இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply