மதி நுட்பமாக கடத்தப்பட்ட போதைப்பொருள் சிக்கியது..!

கனடாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்ட கொரோனா பாதுகாப்பு உபகரணங்களுக்கு நடுவில் போதைப்பொருள் வைத்து கடத்தப்பட்ட சம்பவம் நடந்தேறியுள்ளது.

போதைப்பொருள் கடத்துவோர் எந்தவகையிலாவது தாங்கள் நினைத்ததை சாதித்துவிடுகிறார்கள்.

அந்த வகையில் இப்போது கொரோனா அவர்களுக்கு நல்ல சாக்காக அமைந்துவிட்டது. அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்ட இரண்டு பெட்டிகளை அதிகாரிகள் சோதிக்கும்போது, அவற்றில் மாஸ்குகளும், கைகளை கிருமிநீக்கம் செய்யப் பயன்படும் கிருமிநாசினி அடங்கிய போத்தல்களும் அதில் இருந்துள்ளன.

ஆனால், அந்த பெட்டிகளுக்குள் மறைவாக ஒரு அறை இருப்பது தெரியவரவே, அதை சோதித்தபோது அதற்குள் பயங்கரமாக அடிமைப்படுத்தக்கூடிய போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அந்த பொருட்கள் கனடாவிலிருந்து அனுப்பப்பட்டிருந்தன. அதேபோல், இரண்டு நாட்களுக்குப்பின் மீண்டும் ஒரு பெட்டி அனுப்பப்பட்டிருந்தது.

தபால் அலுவலகத்தில் ஸ்கேனர் வழியாக அதை அனுப்பும்போது, அதில் மாஸ்குகள் முதலான பொருட்களுக்கு நடுவே, போத்தல்களில் போதைப்பொருள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

போதைப்பொருள் கடத்துபவர்கள் கொரோனா பாதிப்பையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி போதைப்பொருட்களை கடத்தி வரும் நிலையில், போதைப்பொருட்கள் சிக்கினாலும், இதுவரை அது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.

என்றாலும், சமீப காலமாகவே கனேடியர்கள் பலர் அவுஸ்திரேலியாவுக்கு போதைப்பொருட்கள் கடத்தும்போது சிக்கிவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply