ரிஸ்வானின் குழந்தைகளை நான் பார்த்துக் கொள்வேன் – தற்கொலைக்கு முயன்ற யுவதி

தலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண்ணை காப்பாற்றுவதற்காக நீரில் குதித்த 32 வயதான இளைஞன் ஒருவர் அண்மையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண்ணை பார்ப்பதற்காக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகர் ருவண் பெர்னாண்டோ தலவாக்கலை வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

இதன் போது தற்கொலைக்கு முயன்ற பெண் தனது பிழையான முடிவுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.

அத்துடன் எனது தனிப்பட்ட காரணத்தினால் நான் அவசர தீரமானம் ஒன்றை எடுத்ததனால் ஒரு உயிரை இழக்க நேரிட்டுள்ளது. அதற்காக என்னை மன்னித்து விடுங்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் நான் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியவுடன் என்னால் உயிரிழந்தவரின் குடும்பத்தினரும் குழந்தைகளையும் பார்த்துக் கொள்வேன் எனவும் அந்த யுவதி கூறியுள்ளார்.

நீரில் வைத்து நான் அவரது கையால் பிடித்துக்கொள்ளப்பட்டேன். அதன் பின்னர் நாங்கள் இருவரும் நீருக்குள் சென்றுவிட்டோம். நான் மேலே வந்து விட்டேன். என்னை காப்பாற்ற வந்தவர் மேலே வரவில்லை.

யாரோ டியுப் ஒன்றை பயன்படுத்தி என்னை காப்பாற்றியது எனக்கு நினைவில் உள்ளதாகவும் அப்பெண் கூறியுள்ளார்

Be the first to comment

Leave a Reply