பாடசாலைகள் திறக்கப்படும் திகதி தொடர்பில் கல்வியமைச்சர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் திறப்பது சம்பந்தமாக எதிர்வரும் 26 ஆம் திகதி சுகாதார அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதென கல்வியமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மாத்தறை மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் கொரோனா வைரஸ் ஆபத்து முற்றாக நீங்கிய பின்னரே பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதனால், பெற்றோர் இது குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் அமைச்சர் அழகபெரும குறிப்பிட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply