வெளிநாட்டில் இருந்து காசி மீது புகார் கூறிய பெண்களின் வீடியோவை வெளியிட்ட அவன் கூட்டாளி! அதிர்ச்சியில் பாதிக்கப்பட்ட பெண்கள்

தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்களை மயக்கி வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த காசியின் கூட்டாளி, புகார் கொடுத்த பெண்களை மிரட்டும் வகையில் அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவிலில் பல பெண்களிடம் சமூகவலைதளம் மூலம் காதல்வலை விரித்து ஏமாற்றி ஆபாசபடம் எடுத்து மிரட்டி பணம் பறித்த காசி வழக்கில் அவனை குண்டர் சட்டத்தில் அடைத்ததும் பாதிக்கப்பட்ட 5க்கும் மேற்பட்ட பெண்கள் துணிச்சலுடன் வந்து புகார் அளித்தனர்.

இந்த நிலையில் சிறையில் இருந்து கொண்டே வெளியில் உள்ள வழக்கறிஞர் நண்பர்கள் மூலம் பொலிசாருக்கு தண்ணீர் காட்டும் வேலைகளை காசி செய்ய தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.அதன்படி பொலிஸ் பிடியில் சிக்காமல் வெளி நாட்டில் பதுங்கி உள்ள தனது நண்பன் கவுதம் மூலம் தன் மீது புகார் அளித்த பெண்களுடன் இருக்கும்

பெண்களின் அந்தரங்க வீடியோவை வெளியிட்டு புதிதாக புகார் கொடுக்க எந்த ஒரு பெண்ணும் முன்வரக்கூடாது என்று மிரட்ட தொடங்கி இருப்பதாக கூறப்படுகின்றது.

அந்தவகையில் காசி மீது புகார் அளித்த பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி சம்பந்தப்பட்ட பெண்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக தெரியவந்துள்ளது.

காசியின் ஒரு லேப்டாப்பை, பொலிசாரால் கண்டுபிடிக்க இயலவில்லை, வழக்கறிஞர் ஒருவர் மூலம் அவரது பெண் தோழியிடம் சென்று விட்டதாக கூறப்பட்டது. அந்த பெண் தோழியோ காசியின் கூட்டாளிகள் வாங்கிச்சென்றுவிட்டதாக கூறி பொலிசாரை சுற்றலில் விட்டார்.

இதையடுத்து கவுதம் குறித்த விவரங்களை விமான நிலையங்களுக்கு தெரிவித்துள்ள பொலிசார், விமானங்கள் இயங்க ஆரம்பித்ததும் அவன் இந்தியாவுக்குள் நுழைந்தால் உடனடியாக கைது செய்யப்படுவான் என்று கூறியுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply