வைத்தியர்களின் கவனக்குறைவால் உயிரிழந்த இளம் தாய்.. பரிதாப சம்பவம்..!

ஜேர்மனியில் வைத்தியார்களின் கவனக்குறைவால் யாழ். பண்டத்தரிப்பைச் சேர்ந்த இளம் பெண் குழந்தை பிறந்து இரண்டு மாதங்களில் சாவடைந்துள்ளார்…

பண்டத்தரிப்பை சேர்ந்த குடும்பம் ஜேர்மனி நாட்டிற்கு புலம் பெயர்ந்துள்ளனர். அங்கு பிறந்து வளர்ந்த பெண் தாயகத்தில் உள்ள இளைஞர் ஒருவரை சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார்…

தம்பதிகள் இருவருக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் சந்திரசிகிச்சை மூலம் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது…

மேற்கொள்ளப்பட்ட சந்திரசிகிச்சையின் தவறினால் மீண்டும் ஒரு சந்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது…

இதனால் குறித்த பெண் கோமா நிலைக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்நிலையில் நேற்று புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் ஜேர்மனியில் பிறந்து வளர்ந்த ஈழத்து இளம் தாயார் திருமதி – ரேகன் பிரியா [வயது 25 ]என்பவரே உயிரிழந்துள்ளார். இவரின் உயிரிழப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது…

Be the first to comment

Leave a Reply