
91 பயணிகளுடன் விபத்துக்குள்ளான பாகிஸ்தான் விமானம் எப்படி கீழே விழுந்தது? எப்படி நடந்தது என்பது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகி வருகிறது.
பாகிஸ்தான் அரசு இது தொடர்பாக முதற்கட்ட விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், அந்த பிகே -8303 விமானம் தரையிறக்கும் முன் விழுந்து நெருங்கி உள்ளது. விமானம் வந்த நேரத்தில் இரண்டு ரன் வேயில் வேறு விமானங்கள் இல்லை.
இதனால் அங்கு இந்த விமானம் தரையிறங்கி இருக்கலாம். ஆனால் இந்த பிகே -8303 விமானம் தரையிறங்கவில்லை. மாறாக அந்த விமானம் இறங்கும் முன் இரண்டு முறை சுற்றி உள்ளது.
முதல் முறை விமானம் இறங்கவில்லை. அப்போது விமானி கட்டுப்பாட்டு தளத்திற்கு அவசர மெசேஜ் அனுப்பி இருக்கிறார். அதில் “என்னால் விமானத்தை தரையிறக்க முடியவில்லை” என்று கூறியுள்ளார்.
விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு தளத்திற்கு அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப கோளாறு இருக்கிறது. அதனால் விமானத்தை இறக்க முடியவில்லை என்று கூறியுள்ளார். அதன்பின் மீண்டும் இரண்டாவது முறை முயன்று, பின் மூன்றாவது முறை விமானத்தை இறக்க முயன்றுள்ளார்.
அவர் 520 அடி உயரத்தில் விமானத்தை பறக்கும் போது எதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அப்போது விமானத்தின் சிக்னல் போய் உள்ளது. அதன்பின் விமானியுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.
சரியாக அப்போதுதான் விமானம் விழுந்து நொறுங்கி உள்ளது. ஓடுதளத்திற்கு சில மீட்டர்களுக்கு முன் விமானம் விழுந்துள்ளது.
விமானம் கொஞ்சம் ஒத்துழைத்து இருந்தால் விமானி அதை சரியாக தரையிறக்கி இருப்பார் என்கிறார்கள். இது தொடர்பாக மேலும் விசாரிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
Be the first to comment