ஆசியாவிற்கு அடுத்த பேரிடி, இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடைக்கு வாய்ப்பு..!

இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷியாவிடம் இருந்து வான்பாதுகாப்பு ஏவுகணை வாங்கவுள்ள இந்தியாவின் செயல் குறித்து, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களின் அமெரிக்க துணை அமைச்சரான ஆலிஸ் வெல்ஸ் கூறும் போது, அமெரிக்க பொருளாதார தடை சட்டப்படி ரஷியா மீது பொருளாதார தடை விதிக்கப் பட்டுள்ளது என்றும், ரஷியாவிடம் இருந்து போர் தளவாடம் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்க இந்த சட்டம் வகை செய்துள்ளது என்றும் தெரிவித்தார்.

ரஷியாவிடம் இருந்து இந்தியா எஸ்.400 அதிநவீன வான்பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்குவதால் அந்த நாட்டின் மீது அமெரிக்கா, பொருளாதார தடை விதிக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply