சொந்தக்கார்களில் இனி வேலைக்கு பயணம் செய்வது சிக்கலாகின்றது- ஜனாதிபதி அதிரடி..!

நேற்று ஜனாதிபதி திணைக்களத்தலைவர்களுடன் மேற்கொண்ட சந்திப்பின் பின்னர் ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையின் விபரம் பினவருமாறு..!

தனித்துவமான பாடசாலை பேரூந்து சேவை; வீதி நெறிசலுக்கு தீர்வாக Park and Ride முறைமை; தனியாருக்குத் தொழில்நுட்ப சேவைகளை வழங்கி சபைக்கு வருமானம்; வீண்விரயம் மற்றும் திருட்டுக்கு முற்றுப்புள்ளி – போக்குவரத்து சபையை கட்டியெழுப்ப

முன்மொழிவுகள்:

திறைசேரியிலிருந்து நிதி ஒதுக்கப்படுவதற்குப் பதிலாகத் திறைசேரிக்கு நிதியை பெற்றுக்கொடுக்கும் அரச நிறுவனமாக இலங்கை போக்குவரத்து சபையை மாற்ற முடியும் என்று நான் நேற்று சபையின் பிரதானிகளிடம் நம்பிக்கை வெளியிட்டேன்.

இலங்கை போக்குவரத்து சபையின் தற்போதைய நிலை தொடர்பாக ஆராய்வதற்காக நேற்று பிற்பகல் ஜனாதிபதி செலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே நான் இதனை தெரிவித்தேன்.

கிழமை நாட்களில் முற்பகல் மற்றும் பிற்பகல் வேளைகளில் அதிக வாகன நெறிசல் காணப்படுகின்றது. இந்த நெறிசலை குறைப்பதற்காகத் தமது சொந்த மகிழூந்துகளில் (Car) பணிகளுக்கு வருவோரைப் பொதுப் போக்குவரத்துச் சேவையுடன் இணைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் நான் சுட்டிக்காட்டினேன்.

இதற்குத் தீர்வாக, ஒழுங்கு செய்யப்பட்ட இடங்களில் கார்களை நிறுத்திவிட்டு அலுவலகங்களுக்கு பொதுப் போக்குவரத்து வண்டிகளில் பயணம் செய்வதற்குத் தேவையான Park and Ride முறை ஒன்றினை உடனடியாக அறிமுகப்படுத்துமாறும் நான் முன்மொழிந்தேன்.

இதற்கு, முழுமையான வசதிகளைக் கொண்ட பேரூந்து வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பதனையும் நான் மேலும் தெரிவித்தேன்.

பாடசாலை மாணவர்களுக்காக, முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பேரூந்து சேவையை மேம்படுத்த வேண்டும் என்று நான் குறிப்பிட்டதுடன், பாடசாலைப் பேரூந்துகளை வேறுபடுத்திக் காட்டும் பொருட்டு – மஞ்சல் நிற பூச்சுமை பூசப்பட்டு, வீதிகளில் முன்னுரிமை வழங்கப்படக்கூடிய வகையில் சேவையில் ஈடுபடுத்துவது குறித்தும் நேற்று கலந்துரையாடப்பட்டது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான வண்டிகளையும் தனியார் வண்டிகளையும் இரண்டு வெவ்வேறு நிறங்களில் சேவையில் ஈடுபடுத்த வேண்டிதன் முக்கியத்துவத்தையும் நான் சுட்டிக்காட்டினேன்.

சபை ஊழியர்களை வலுவூட்டுதல், புதிய முறைமைகளை அறிமுகப்படுத்தல், வீண்விரயத்தைக் குறைத்தல் மற்றும், திருட்டு மற்றும் ஊழலை ஒழித்தல் போன்றவற்றுக்காக முறையான நடவடிக்கைகளைப் பின்பற்றவேண்டியது குறித்தும் நாம் கலந்துரையாடினோம்.

நிறுவனத்தை முன்னேற்றுவது தோடர்பில் தொடர்ச்சியாக ஆய்வுகள் மற்றும் மீளாய்வுகள் இடம்பெற வேண்டும் என்றும் நான் குறிப்பிட்டேன்.

சுமார் 4500 பேர் கொண்ட திறமையான தொழிநுட்ப பணியாளர் படை ஒன்று இலங்கை போக்குவரத்து சபையில் உள்ளது. அவர்களிடமிருந்து முழுமையான பயனைப் பெறும் பொருட்டு, நிறுவனத்திற்கு வெளியே இருந்தும் வண்டிகளைப் பராமரிக்கும் செயற்கட்டளைகளைப் பெற்று வருமானம் ஈட்ட முடியும் என்பதனையும் நான் குறிப்பிட்டேன்.

பயன்படுத்தப்படாமல் பெருமளவான காணிகள் இலங்கை போக்குவரத்து சபையிடம் உள்ளன. அக்காணிகளை உரிய முறையில் முகாமைத்துவம் செய்வதன் மூலமும் வருமானம் ஈட்டமுடியும்.

கிராமிய பிரதேசங்களில் இருந்து விவசாய அறுவடைகளை கொண்டுசெல்வதன் மூலம் விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் உதவக்கூடிய வாய்ப்புகள் இலங்கை போக்குவரத்து சபையிடம் உள்ளது என்றும் நான் குறிப்பிட்டேன்.

பயிற்சிப் பாடசாலைகளை மேலும் மேம்படுத்தி ஊழியர் அறிவை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் நான் சுட்டிக்காட்டினேன்.

குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட காலத் திட்டத்திற்கு அமைய மொத்த நடடிவக்கைகளையும் முன்கொண்டு செல்வதற்கும் சில ஆலோசனைகளை நான் வழங்கினேன்.

எனது செயலாளர் பி. பீ. ஜயசுந்தர, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க, தலைமை நிறைவேற்று அதிகாரி சாகர ஹேமந்த வடுகே, பணிப்பாளர் நாயம் அதுல குமார மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

Be the first to comment

Leave a Reply