பாடசாலை மாணவர்களுக்கு அரசின் மகிழ்ச்சியான செய்தி..!

பாடசாலை மாணவர்களின் மதிய உணவிற்காக ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் மாணவர்களுக்கு போசாக்கு உணவு பொதிகளை வழங்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.   கல்வியமைச்சின் செயலாளர் என்.எச்.எம் சித்ரானந்த இதனை தெரிவித்துள்ளார்.  

அந்தவகையில் மாணவர் ஒருவருக்கு தலா ஆயிரம் ரூபா பெறுமதி வாய்ந்த போசாக்கு உணவு பொதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் வலய கல்வி பணிமனைகளுடன் இணைந்து அதனை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply