இலங்கையின் விமான நிலையங்களை திறக்க ஏற்பாடு..!

COLOMBO, SRI LANKA - FEBRUARY 19, 2014: Sri Lankan Airplane parked on apron in front of air traffic control tower at Bandaranaike International Airport. It is hub of Sri Lankan Airlines, the national carrier of Sri Lanka.

கட்டுநாயக்க விமான நிலையத்தைதொடர்ந்து மத்தள, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் இரத்மலானை விமான நிலையங்களில் பயணிகள் சேவைகளை விரிவுபடுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நாட்டிற்குள் பரவுவதை தடுக்க பல மாற்று நடவடிக்கைகளில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறதென்றும் குறிப்பிட்டார்.

மேலும், ஆண்டுதோறும், 10 முதல் 12 மில்லியன் பயண நடவடிக்கைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக நடைபெறுகின்றன, இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 18 முதல் 20 மில்லியன் வரை உயருமென மதிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் விமான சேவைகள் தடைப்பட்டுள்ளன, இதனால் உலகிலுள்ள அனைத்து விமான நிலைய சேவைகளும் சரிவடைந்துள்ளதாக கூறிய அவர், சுகாதாரத் தரப்பு ஆலோசனையுடன் ஏனைய விமான நிலையங்களையும் திறக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Be the first to comment

Leave a Reply