மீண்டும் எகிறியது முட்டையின் விலை..!

முட்டையின் விற்பனை விலை அதிகரிப்பு!

முட்டை ஒன்றின் சில்லறை விற்பனை விலை 16 ரூபாவாக அதிகரித்துள்ளதென புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்ட ஆரம்பகட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆலோசனைக்கு அமைய முட்டை ஒன்றின் சில்லறை விற்பனை விலை 10 ரூபாவாக குறைக்கப்பட்ட நிலையில், தற்போது முட்டை ஒன்றின் விலை 16 ரூபாவாக அதிகரித்துள்ளதென புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட கடந்த இரண்டுமாத காலகட்டத்தில் 50 மில்லியன் முட்டைகள் சேகரிக்கப்பட்டதாக கால்நடைத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

Be the first to comment

Leave a Reply