பூநகரி பாலத்தை ஊரடங்கில் கழட்டிய பாதகர்கள்..!

தேசவிரோதிகளின்
படுபாதகச்செயல்—-!

கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன்–பூநகரி வீதியில் 14/2 km பகுதியில் அமைந்துள்ள குடமுருட்டி நீள் பாலத்தின் துருப்பிடிக்காத உயர்ரக உலோகத்திலான கேடர்கள் கொரோனா கால இரவு ஊரடங்கு நேரத்தின்போது மிகவும் சாதூர்யமாக திட்டமிட்டு மின்சார சுரை ஆணிகழட்டிகள் மூலம்
பலமில்லியன் (ஏறக்குறைய 15 மில்லியன்) http://www.dailysri.com பெறுமதியான பாலத்தை தாங்கி நிற்பதும் அதன் அமுக்கத்தை தக்கவைக்கும் இக்கேடர்கள் திருடப்பட்ட நிலையில்—-
வீதி அபிவிருத்தி அதிகாரசபை கிளிநொச்சி நிறைவேற்றுப் பொறியியலாளர் அவர்களால்
கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு குற்றத்தடுப்புப்பிரிவினர் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் பணியாளர்களின் விரைந்த செயற்பாட்டின் பலனாக கனகபுரம் வீதியில் #பிரபல இரும்புவியாபாரி# ஒருவரின் மறைவிடத்தில்து ண்டாக்கப்பட்ட ஒருதொகுதி கேடர்களும்
A9 வீதியில் கிளி வைத்தியசாலைக்கு அண்மித்த பகுதியில்குறித்த இரும்புவியாபாரியின் மற்றோர் மறைவிடத்தையும் கண்டுபிடித்த நிலையில் அங்கும் பல
கேடர்கள் தகரங்களால் மறைத்து மூடி வெட்டுவதற்கு தயார்நிலையில் இருந்தன –!மேற்படி விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்துவருகின்றனர்

பரந்தன் –பூநகரி வீதியானது யாழ்ப்பாணம், மன்னார் என பல்லாயிரம் மக்கள் தினமும் பயணிக்கும் வீதி
மாற்றுவழி இல்லாத பாலம் குடமுருட்டிப்பாலம்
பூநகரி ,முழங்காவில் வைத்தியசாலை நோயாளர் காவுவண்டிகள் மக்கள் போக்குவரத்து என முக்கிய கடப்பானாகிய இப்பாலத்தின் உதிரிபாகங்கள் திருட்டினால் கனரக வாகனபோக்குவரத்து தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளது-!

பாலத்தின் ஸ்த்திரத்தன்மை உறுதி செய்யப்படும் வரை மட்டும் இத்தடை தொடரும்.

அரச சொத்துக்களை சூறையாடியமை ஊரடங்கு நேரத்தில் திருட்டு நோயாளர் ,மக்களின் உயிர்களை விலைபேசியமை அரச சொத்து என்று கண்கூடாக தெரிந்தும் இதற்கு துணைபோனவர்கள் என பலர் குற்றவாளிகளாவர் சட்டம் இவர்களுக்கு தகுந்த பாடத்தை கற்பிக்கும் எனநம்பலாம்—-!

இதற்கு அதிகம் பகிருங்கள் உரியவர்களை இன்னும் சென்றடைய..!

Be the first to comment

Leave a Reply