எஜமானரை காப்பாற்ற வெடி குண்டுகளை எடுத்து சென்ற நாய் சிதறிப்பலி..!

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள ராமகவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராணி. இவருக்கும் இவரின் சகோதரர் முருகன் மற்றும் சின்னத்துரை ஆகியோருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை இருந்து வந்துள்ளது.

குடிபோதையில் இவர்கள் செல்வராணியிடம் வந்து பிரச்சினை செய்ததோடு தான் தயாரித்து வைத்திருந்த 4 நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு சென்றனர்.

ஆனால் இதைப் பார்த்த செல்வராணியின் வீட்டில் வளர்த்து வந்த நாய், அந்த வெடிகுண்டுகளை வாயில் கவ்வியபடி வெளியே தூக்கி எறிந்தது. அப்போது ஒரு வெடிகுண்டு திடீரென வெடித்து சிதறியது.

இதில் அந்த நாய் தலை சிதறி பலியானது. நாயின் எஜமான விசுவாசத்தால் செல்வராணி மற்றும் அவரது 2 மகன்கள் உயிர் தப்பினர்.

இதையடுத்து முருகனை கைது செய்த போலீசார் தலைமறைவான சின்னத்துரையை தேடி வருகின்றனர். தன் உயிரை கொடுத்து எஜமானர்களை காப்பாற்றிய அந்த நாய், தன் விசுவாசத்தின் அளவையும் எடுத்துக் காட்டி சென்றிருக்கிறது. 

Be the first to comment

Leave a Reply