
கிளிநொச்சி பளை பகுதியில் சற்று முன் விமானப்படை அம்பியூலன்ஸ் மோதி குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்
தம்பகாமம் வீதியில் இருந்து ஏ9 வீதிக்கு மேட்டார் வண்டியில் கணவனும் மனைவியும் பயணித்த போது
யாழில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த விமானப் படை அம்பியூலன்ஸ் மோதி விபத்து நேர்ந்துள்ளது
இதில் மோட்டார் வண்டியில் பயணித்த குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன்
அவரின் மனைவி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
விபத்தில் பலியானவர் 51 வயதுடைய யாழ் நாவற்குழி பகுயை சேர்ந்த அந்தோனி அஞ்சலஸ்
என தெரிய வருகிறது
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
Be the first to comment