பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்..!

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் பின்னணியில், க.பொ.த சாதாரண தர, உயர்தர பரீட்சைகளைப் பிற்போடும் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என இலங்கை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதுவரை இவ்வாண்டுக்குரிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மற்றும், உயர் தரப் பரீட்சை ஆகியவற்றை பிற்போடுவதற்கு தீர்மானிக்கவில்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எந்தவொரு பரீட்சார்த்திக்கும் அநீதி இழைக்கப்படாத வகையில் பரீட்சைகள் நடத்தப்படுமென அமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த தெரிவித்தார். கண்டி குருதெனிய கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயங்களை தெரிவித்தார்.

கால அட்டவணைகளுக்கு அமைய பாடத்திட்டங்களில் பூர்த்தி செய்யப்பட்ட பகுதிகளுக்கு அமைய பரீட்சைகள் நடத்தப்படும். அத்துடன் சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமையவே பாடசாலைகளும் மீளத் திறக்கப்பட உள்ளதாக என்.எச்.எம்.சித்ரானந்த மேலும் கூறினா

Be the first to comment

Leave a Reply