சர்வதேச அழுத்தம் இல்லாவிடில் தமிழ் இனம் இல்லாமல் ஆக்கப்படும்..!- சார்ள்ஸ் நிர்மலநாதன்

சர்வதேசத்தின் அழுத்தமோ அல்லது வல்லரசு நாடுகளின் அழுத்தமோ இலங்கை மீது பிரயோகிக்கப்படாவிட்டால் இலங்கையில் தமிழ் மக்கள் இல்லாதொழிக்கப்படுவார்கள் என முன்னால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் 19 ஆம் திகதி இரானுவ வீரர்களை கெளரவிக்கின்ற நிகழ்வில்  இலங்கையினுடைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்த கருத்து தொடர்பாக இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மல நாதன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;
இந்த நாட்டில் இடம் பெற்ற யுத்த குற்ற மீறல்கள் தொடர்பாக சர்வதேச நாடுகளோ சர்வதேச அமைப்புக்களோ தங்கள் மீது அழுத்தங்களை பிரயோகித்தால்  தாங்கள் அந்த அமைப்பில் இருந்து விலகுவோம் என்று கோத்தாபாய ராஜபக்ஸ வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இவ்வாறாக நாட்டின் ஜனாதிபதி தமிழ் மக்களுக்கு அதிர்சியூட்டும் விதமாக கருத்துக்களை பகிரங்கமாக தெரிவித்துள்ளார் 2009 ஆண்டு இடம் பெற்ற யுத்த குற்றமாக இருக்கலாம் எதிர்காலத்தில் இலங்கையில் தமிழர்கள் கெளரவமாக வாழ்வதற்கு தேவையான அரசியல் யாப்பு மாற்றமாக இருக்கலாம் ஒட்டு மொத்த தமிழர்களும் எதிர்பார்த்து நிற்பது அவை அனைத்திற்குமான தீர்வு சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாக இது இடம் பெறவேண்டும் என்பதே, அப்படி தமிழ் மக்கள் எதிர்பார்துள்ளபோது நேற்றையதினம் ஜஸ்மின் சூக அவர்களும் அம்மையார் நவனீதம் பிள்ளை அவர்களும் கனடா பிரதமர் அவர்களும் இந்தியாவில் இருக்கின்ற முக்கிய அமைச்சர்களும் தமிழர்களுடைய அழிப்பு சம்மந்தமாக நினைவூட்டல்களை இலங்கைக்கு தெரிவித்துருக்கின்றார்கள்.

அவர்களில் சிலர் வெளிப்படையாகவும் சிலர் மறைமுகமாக தெரிவித்திருந்தாலும் அதை முற்றுமுழுதாக எதிர்கின்ற வகையில் நாட்டின் ஜனாதிபதியின் கருத்து அமைத்ந்திருக்கின்றது. ஜனாதிபதியின் இந்த கருத்து தொடர்பாக தமிழர்கள் அனைவரும் இணைந்து இந்த அரசாங்கம் எங்களுடைய மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க கூடிய ஐநா மனித உரிமை பேரவையோ அல்லது சர்வதேச வல்லாதிக்க நாடுகளின் மூலமோ மிகப்பெரிய அழுத்தை கொடுத்து அதன் மூலம் எங்களுடைய மக்களுக்கு பொறுப்பு கூறல் விடயமாக இருக்கலாம் அல்லது எங்களுக்கு உரிய எதிர்கால அரசியல் தீர்வு திட்டமாக இருக்கலாம் அவர்களுடைய அழுத்தம் இல்லாமல் இந்த இலங்கை அரசாங்கத்தில் நாங்கள் மிகவும் பதிக்கப்பட்டு அவர்களால் நசுக்கப்பட்டு இந்த தமிழ் இனம் இலங்கையில் இருந்து அழிகின்ற சூழ் நிலை இதே அரசாங்கத்தின் கருத்தோடு நாம் ஒருமித்து இருந்தால் அல்லது சர்வதேசம் நம்மை கைவிடுவார்களாக இருந்தால் எதிர்காலத்தில் எங்களுடைய இனம் இலங்கையில் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போய்விடும் என அவர் தெரிவித்துள்ளார். 

எனவே சர்வதேச நாடுகள் சர்வதேச அமைப்புக்களிடம் கேட்டு நிற்பது 2009 ஆண்டு நடைபெற்ற யுத்த குற்ற மீறலுக்கும் தமிழர்களின் நிரந்தரமான தீர்வுக்கும் இந்த அரசாங்கதிற்கு அழுத்தம் கொடுத்து எங்களுக்கு அந்த தீர்வை பெற்று தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply