தமிழர் பகுதிகளில் கல்வி மட்டம் குறைவுடன் சிசு கொலையும் நிகழ்கின்றது..ஏன்..!

சிசுவை மலசலகூட குழிக்குள் போட்ட தாய் கைது!

பிறந்த சிசுவை வீட்டு மலசலகூடக் குழிக்குள் போட்ட தாயாரை அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புத்தூர், கிழக்கு விக்னேஸ்வரா வீதியில் உள்ள வீடொன்றிலேயே இந்தச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

நான்கு நாள்களுக்கு முன்னர் அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் வீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மலசலகூடத்தின் குழிக்குள் அந்தச் சிசுவை தாயார் போட்டுள்ளார்.

நான்கு நாட்கள் கடந்த நிலையில் சிசுவின் உடல் அழுகி, அயலில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சிசுவின் சடலத்தை மீட்டனர். அத்துடன், தாயாரையும் கைது செய்தனர்.

சந்தேக நபரான பெண்ணின் கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்

Be the first to comment

Leave a Reply