இலங்கையில் நேற்று சடுதியாக அதிகரித்த கொரோனா தொற்று..!

ஸ்ரீலங்காவில் நேற்று சடுதியாக அதிகரித்த கொரோனா தொற்று; தற்போது வெளியான தகவல்

ஸ்ரீலங்காவில் நேற்றைய தினம் இனங்காணப்பட்ட அனைத்து கொரோனா நோயாளிகளும் கடற்படையினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மாத்திரம் 35 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டனர். இதன் மூலம் ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களது எண்ணிக்கை 1027 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நேற்று அடையாளம் காணப்பட்ட 35 பேரும் கடற்படையினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா தொற்று ஏற்பட்டு பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 569 ஆக அதிகரித்துள்ளதோடு, நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி 9 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இவ்வாறு கடற்படையினருக்கு மட்டும் தொற்று அதிகரிப்பது பலத்த ஐயங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply