அமெரிக்காவிற்கு எதிராக களம் இறங்கியது ஐ.நா..!

உலக சுகாதார அமைப்பின் மீது அமெரிக்கா குற்றம்சாட்டி, நிதியை நிரந்தரமாக நிறுத்த நேரிடும் என மிரட்டல் விடுத்த நிலையில், உலக சுகாதார அமைப்பிற்கு ஐரோப்பிய ஒன்றியம், ஆதரவு அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா மீது கடும் அதிருப்தியில் உள்ள அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பு, சீனாவின் கைப்பாவை எனவும் குற்றஞ்சாட்டியது.

இந்தநிலையில், ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘இது ஒற்றுமைக்கான நேரம். குற்றத்தைச் சுட்டிக்காட்டி பல தரப்பு ஒற்றுமையைக் குறைப்பதற்கான நேரம் அல்ல.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக உலக சுகாதார அமைப்பு எடுக்கும் முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம். மேலும் அவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு முன்னரே நிதி அளித்திருக்கிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்புக்கு கிட்டத்தட்ட 500 மில்லியன் டொலர் வரை அமெரிக்கா நிதியுதவி அளிக்கிறது. ஆனால் சீனா, 38 மில்லியன் டொலர் நிதியுதவி செய்கிறது.

Be the first to comment

Leave a Reply