அம்பான் புயலால் அலைகள் 6 மீட்டர் உயரத்துக்கு எழும்..!

அம்பன் புயல் பிற்பகல் முதல் கரையை கடக்கத் தொடங்க உள்ள நிலையில் தற்போது ஒடிசா மற்றும் மேற்குவங்க கடற்பகுதிகளில் நான்கு முதல் 6 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும்பும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்நிலையில், முழு உஷார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் நிறுத்தப்பட்டு உள்ளதாக அதன் தலைமை இயக்குனர் சத்யா நாராயண் பிரதான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகங்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும் உரிய எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வை அளித்து உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply