கொரோணா நோயாளிகளுக்கு மனநலம் பாதிக்கப்படும்- லண்டன் விஞ்ஞானிகள் அறிக்கை..!

கொரோனா நோயாளிகளுக்கு மனநல பிரச்சனை ஏற்படும் என்று லண்டன் பலகலைகழக ஆய்வாளர்கள் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் ‘தி லான்செட் சைக்கியாட்ரி’ இதழில் வெளியிட்ட செய்தியில், கொரோனா நோயாளிகளில் நான்கில் ஒருவர், மனப் பிரமை பிரச்சனைக்கு ஆளாகிறார்.

இது வழக்கமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஏற்படுவதுதான். எனினும் இந்த பிரச்சனை ஒருவரின் உயிரைப் பறிக்க அல்லது குணமடைவதை தாமதிக்க காரணமாக இருக்கிறது.

கொரோனா சிகிச்சைக்குப் பின் குணமடைந்தோர், தீவிர மன அழுத்தம், மன உளைச்சல், பதற்றம் ஏற்படலாம் அல்லது ஏற்படாமலும் இருக்கலாம்.

Be the first to comment

Leave a Reply