அமைச்சர் தொண்டமானிடம் மன்னிப்புக்கோரி பொலிஸ் தலைமையகம் கடிதம்..!

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானிடம் மன்னிப்புகோரி பொலிஸ் தலைமையகத்தால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நவாஸ் வெளியிட்ட கருத்திற்காக பொலிஸ் தலைமையகம் மன்னிப்பு கோருவதாகவும் நவாஸின் கருத்தைக் கண்டிப்பதாகவும் கடிதமொன்றை கொழும்பு பொலிஸ் தலைமையகத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அனுப்பி வைத்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறி கொழும்பிலிருந்து நுவரெலியா மாவட்டத்திற்கு 7000 இளைஞர்கள் சென்றிருப்பதாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கூறியிருந்தார்.

தனியார் வானொலி ஒன்றில் கடந்த இரண்டாம் திகதி ஒலிப்பரப்பாகிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு கேள்விகளுக்கு பதிலளித்த சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நவாஸ், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்திருந்த கருத்தை மறுத்திருந்தார்.

இதனால் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் வெளியிட்டிருந்த கருத்து தவறானதென பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கருத்தை மறுத்திருந்த சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நாவாஸ்க்கு எதிராக பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிடம் முறைப்பாடொன்றை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பதிவு செய்திருந்தார்.

அதற்கு பதில் வழங்கும் வகையில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நவாஸ் வெளியிட்ட கருத்திற்காக பொலிஸ் தலைமையகம் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானிடம் மன்னிப்பு கோருவதாகவும் நவாஸின் கருத்தைக் கண்டிப்பதாகவும் கடிதமொன்றை பொலிஸ் தலைமையகத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அனுப்பி வைத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply