கொரோனா வைரஸால் உயிரிழக்கும் அதிக சாத்தியம் கொண்டவர்கள் யார்?

கொரோனா வைரஸால் யார் உயிரிழக்கும் அதிக சாத்தியங்கள் காணப்படுகிறது என்பதனை இதயம் மூலம் கணிக்க முடியும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலது இதய அறைகள் விரிவடைந்துள்ளவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானால் அவர்கள் உயிரிழப்பதற்கு நான்கு மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று ஆய்வு கூறுகிறது. கொரோனா வைரஸ் இதயம் மற்றும் இரத்த நாளங்கள் மற்றும் நுரையீரலைத் தாக்குகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன

நியூயோர்க்கில் உள்ள மவுண்ட் சினாய் பல்கலைக்கழக இகான் ஸ்கூல் ஒவ் மெடிசின் ( Mt Sinai University Icahn School of Medicine in New York) ஆராய்ச்சியாளர்கள் 110 கொரோனா வைரஸ் நோயாளிகளின் நிலைமைகளையும் அவர்களின் முந்தைய மருத்துவ பதிவுகளையும் ஆய்வு செய்தனர். மேலும் அவர்களின் ஈகேஜி எனப்படும் எக்கோ கார்டியோகிராபி (Electrocardiographyயை ஆய்வு செய்தனர்.
இவர்களில் ஈகேஜிக்கள் வழங்கப்பட்ட நோயாளிகளில் முப்பது சதவீதமானோர் ஏற்கனவே ஆபத்தான நிலையில் இருந்தனர், வென்டிலேட்டர்கள் மூலம் சுவாசித்து வந்தனர்.

31 சதவீத நோயாளிகளுக்கு ‘வலது வென்ட்ரிகுலர் டைலேஷன்’ இருப்பதை ஈகேஜி வெளிப்படுத்தியது, அதாவது ஒவ்வொரு இதயத்தின் கீழ் வலது அறை இயல்பை விட பெரியதாக உள்ளது.

அதில் விரிவாக்கப்பட்ட வலது வென்ட்ரிக்கிள்( இதய அறைகள்) கொண்ட 41 சதவீத நோயாளிகள் இறந்து உள்ளனர். இதய அறைகளில் மாற்றங்கள் இல்லாதவர்கள் 11 சதவீதம் தான் மரணமடைந்துள்ளனர்.
பெரிதாக்கப்பட்ட வலது வென்ட்ரிக்கிள் நோயாளிகளில் சுமார் 62 சத வீதம் – ஒக்ஸிஜன் இல்லாத இரத்தத்தை நுரையீரலுக்கு செலுத்தும் இதயத்தின் அறையுள்ளவர்கள் மரணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு 19 சதவீதம் இதய பிரச்சினைகள் இருப்பதாக சீனாவின் ஆரம்பகால தகவல்கள் தெரிவிக்கின்றன, இந்த நிலைய அமெரிக்கா முழுவதும் உள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிகக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply