போர் வெற்றி ஒத்திகையில் பங்கு பற்றவர்களையும் விட்டு வைக்காத கொரோணா..!

போர் வெற்றி ஒத்திகையில் பங்கேற்ற இரு கடற்படையினருக்கு கொரோனா உறுதி – 30 பேருக்கு ஏற்பட்டுள்ள நிலை

ஸ்ரீலங்காவின் 11ஆவது தேசிய போர் வீரர்கள் தின நிகழ்விற்கான ஒத்திகையில் கலந்து கொண்ட இரு கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனால் அவர்களுடன் தொடர்பிலிருந்த 30 கடற்படையினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என கடற்படை பேச்சாளர் இசுரு சூரியபண்டார தெரிவித்தார்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட இரு வீரர்களையும் மேலதிக பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தியதாகவும், முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் பரிசோதனை முடிவுகளில் ஏற்பட்ட தவறுகளின் காரணமாகவே இவர்களுக்கு மீண்டும் பரிசோதனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் இவர்களுடன் தொடர்பிலிருந்த கடற்படை வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் கடற்படை பேச்சாளர் இசுரு சூரியபண்டார தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply