போர் வெற்றி விழா தொடர்பில் மணிவண்ணனின் விசேட அறிக்கை.. “நீங்கள் வேறு நாங்கள் வேறு”

தெற்கில் போர் வெற்றி விழா கொண்டாடினால் கொரோனா தொற்றாது, தனிமைப்படுத்தல் தேவையில்லை: இறந்த மக்களுக்கு வடக்கு கிழக்கில் அஞ்சலி செலுத்தினால் கொரோனா தொற்றும் அஞ்சலி செலுத்தியவர் தனிமைப்படுத்தப்பட வேண்டும். இதைத்தானே நாம சொல்றம் நாங்க வேற நீங்க வேற எண்டு. இதை தானே நாங்க சொல்றம் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம், தேசம் எண்டும் நீங்க வேற தேசம் எண்டும். எங்களுக்கு வேற சட்டம் உங்களுக்கு வேற சட்டம்.

அல்லது கொரோனாவை கட்டுப்படுத்த யாழ்ப்பாணம் HQI கொழும்பு விரைகின்றாரோ தெரியவில்லை அதி உத்தமரையும் அவரோடு வெற்றி விழா கொண்டாடியவர்களையும் தனிமைப்படுத்த.

விஸ்வலிங்கம் மணிவண்ணன்
தேசிய அமைப்பாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

Be the first to comment

Leave a Reply