காத்தான்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்ட 28 கொரோணா தொற்றுக்குள்ளான கடற்படை வீரர்கள்..!

அம்பாரை ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து 28 கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படை வீரர்கள் இன்று இரவு 8.30 மணியளவில் காத்தான்குடி வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


அம்பாரை ஓலுவில் தனிமைப்படுத்தும் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த  வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படையினர் 28 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து அவர்களை மட்டக்களப்பு காத்தான்குடி ஆதாரவைத்தியசாலையில் சிகிச்சைக்காக இன்று செவ்வாய்க்கிழமை (19) அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.ஜாபீர் தெரிவித்தார். 

வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 80 பேரை அம்பாறை ஒலுவில் தனிமைப்படுத்தும் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தனர் இவர்ககளை பரிசோதனை செய்ததில் நேற்று 10 போருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டு அவர்களை வெலிகந்தை கண்டக்காடு இராணுவ சிகிச்சை முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர். 


 இந்த நிலையில் ஏனைய கடற்படையினருக்கு பரிசோதனை மேற்கொண்ட இன்று 28 பேருக்கு கொரோனா தொற்றுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர்களை இன்று செவ்வாய்க்கிழமை இரவு மட்டக்களப்பு காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


இதேவேளை காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் கொரோனா தெற்றுக்குள்ளாகி அனுமதிக்கப்பட்டிருந்த 62 பேரில் 61 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருந்த நிலையில் ஒருவர் மாத்திரம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு நேற்றைய தினம் எடுத்த பரிசோதனையிலும் தொற்று இருப்பது ஊறுதிப்படுத்தப்பட்டுள்ளமையினால் அவரை இன்று (19) மாலை 3 மணியளவில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இருந்து கொழும்பு IDH வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

Be the first to comment

Leave a Reply