கிடைச்ச கணவனும் சரியில்லை பெற்றோரும் சரியில்லை..! தற்கொலைக்கான காரணம் வெளியானது..!

அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவுபற்று பிரேதேச செயலகத்துக்கு உட்பட்ட கோவில் போரதீவு கிராமத்தில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த இளம் குடும்பப் பெண்ணின் மரணம் தொடர்பில், அவரது கைப்பட உருக்கமான பதிவொன்றை எழுதிவிட்டு மரணித்துள்ளார்.

எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள்.நான் உயிரோடு இருந்து எதுவும் சாதிக்க போவதில்லை. அப்பவே சாக வேண்டிய நான் இன்னும் இருந்து என்ன செய்ற.

எல்லோரும் நான் சந்தோசமா இருக்கன் எண்டுதான் நினைப்பிங்க. நான் சந்தோசமா இல்லை. வாழ்க்கை நிம்மதியா வாழனும் எண்டுதான் நினைச்சன்.

வாழமுடியல்ல எல்லோரும் நல்லா இருக்கனும் எண்டு நினைச்சன். எனக்கு கடவுள் நிம்மதியான வாழ்க்கையை குடுக்கல.

எனக்கு கிடைச்ச அம்மா அப்பாவும் சரியில்ல. கிடைச்ச புருசனும் சரியில்ல. இப்படி கேவலபட்டு வாழ்றது அவசியமில்ல.


ஒரு தரம் இரண்டு தரம் என்றால் பொறுத்து போகலாம். இது வாழ்க்கை புள்ளா நீடிக்க போகிறது.
இப்படி வாழ்க்கை வேணாம் என்டு. அம்மா இருக்கிற இடத்துக்கு நானும் போறன். என்ன தேவல்லாத யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது. இது நான் சுயமாக எடுத்த முடிவு. என அந்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply