இலங்கையை கொரோணாவுடன் இயற்கையும் சீர்குலைக்கின்றது…!

பலாங்கொட, இரத்தினபுரி..

பலாங்கொடை , ரக்வான , இரத்தினபுரி பிரதேசத்திலும் தொடர்ந்து பெய்து வந்த மழைக்காரணமாக களுகங்கை பெருக்கெடுத்து  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இரத்தினபுரியில் கொடிகமுவ, பன்டரவத்தை, எலபாத மற்றும் பலங்கொடை பஸ்தரிப்பு நிலையமும் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

இரத்தினபுரியில் சில பாடசாலைகளும் வெள்ளத்தல் மூழ்கியுள்ளது. இ/அல் மக்கியா மு.ம.வி பாடசாலை படம் கீழே காணப்படுகிறது.

இரத்தினபுரி வெள்ளம் குறித்து அனர்த்த முகாமைத்துவத்தினாலும்,காலநிலை அவதானிப்பு நிலையத்தினாலும், அரசினாலும் முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தது.

இரத்தினபுரி கல்வி வலயத்தினால் பாடசாலைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. வெள்ளத்தில் பாதிக்கப்படும் பாடசாலைகளில் உள்ள கணனிகள், தளபாடங்கள் போன்ற அனைத்து சொத்துக்களையும் பெற்றோர் ஆசிரியர்களின் உதவியுடன் வெள்ளத்தால் மூழ்காத வகுப்பறைகளில் ஒதுக்கி வைக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டது.

வழமையில் மாலை நேரங்களில்  வெள்ளப்பெருக்கு ஏற்படுவது  வழமை இன்று சஹர் செய்ததை தொடர்ந்து பலத்த மழையும் தற்போது வெள்ள அனர்த்த ஏற்பட்டுள்ளது.

வெள்ள எதிர்வு கூரலை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள covid – 19 பிரச்சினை அதிகரிக்ககூடும் எனவும் மக்கள் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து இருப்பினும் கூட்டமாக இருப்பதை தவிர்ப்பது, மாஸ்க் அனிவது போன்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அது மட்டுமன்றி இரத்தினபுரி பிரதேசத்தில் எலிக்காய்ச்சல் அதிகமாகவும் காணப்படுவதால் வெள்ளத்தில் மக்கள் நடமாடுவதை இயன்றளவு தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply