கனடாவில் கொரோனா போராளிகளை கௌரவிக்க சென்ற விமானம் விபத்து

கனடாவில் கொரோனா போராளிகளை கௌரவிக்க சென்ற விமானம் விபத்து

கனடாவில் வீட்டின் மீது விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் பெண் விமானி ஒருவர் பலியாகியுள்ளார்.

கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திவரும் நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மக்களை காக்க வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார பணிப்பாளர்கள், பொலிஸார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் துப்பரவு பணியாளர்கள் கடமையுணர்வுடன் போராடி வருகின்றனர்.

இதனையடுத்து, கொரோனவிலிருந்து மக்களை பாதுகாக்க போராடுபவர்களை பல நாடுகளும் கௌரவித்து வருகின்றன.

அவ்வாறு கனடாவில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வின்போது விமானம் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

கனடாவில் கொரோனா போராளிகளை கௌரவிக்கும் விதமாக அந்த நாட்டு விமானப்படை விமானங்கள் வான் சாகசத்தில் ஈடுபட்டன.

நாடு முழுவதும் பல்வேறு மாகாணங்களில் விமானப்படை விமானங்கள் வானில் பறந்து சாகசங்களை நிகழ்த்தின.

அந்த வகையில் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணம் கம்லூப்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து 2 விமானப்படை விமானங்கள் சாகச நிகழ்ச்சிக்காக புறப்பட்டு சென்றன. 2 விமானங்களிலும் தலா 3 விமானிகள் இருந்தனர்.

புறப்பட்ட சில நொடிகளில் ஒரு விமானத்தில் திடீரென தீப்பிடித்தது. இதனை அறிந்த விமானிகள் உடனடியாக விமானத்தை தரையிறக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் விமான நிலையத்தையொட்டி இருக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்து விபத்திற்குள்ளாகியது.

விமானம் வீட்டின் மீது விழுவதற்கு சில வினாடிகளுக்கு முன்னர் ஒரு விமானி மட்டும் பாராசூட் மூலம் வெளியே குதித்து உயிர் தப்பினார்.

மற்ற 2 விமானிகளும் விபத்தில் சிக்கினர். இதில் ஒரு விமானி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொருவர் பலத்த காயம் அடைந்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply