யாழ் மாநகரசபையின் 4ம் வட்டார உறுப்பினர் மற்றும் வடமாகாண பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஆகியோரின் பொறுப்பற்ற செயற்பாடுகள்……

சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு….

யாழ் மாநகரசபையின் 4ம் வட்டார உறுப்பினர் மற்றும் வடமாகாண பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஆகியோரின் பொறுப்பற்ற செயற்பாடுகள்……

யாழ் மாநகர சபையின் 4ம் வட்டார உறுப்பினர் திருமதி.இராகிணி அவர்கள் தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா பிரச்சனையின்போது கொழும்பில் தங்கி இருந்துவிட்டு கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் நல்லூர் ஆலயத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள தனது இல்லத்திற்கு வந்துள்ளார்.

அவ்வாறு வருகை தந்த அவர் சுயதனிமை படுத்தலுக்கு உள்ளாகாமல் தான் கொழும்பில் இருந்து வந்ததை மறைத்து அதாவது தான் வந்து 14 நாட்கள் கடந்து விட்டது என்று தெரிவித்து அவரது இல்லம் அமைந்துள்ள சூழலில் உள்ள அப்பாவி கூலி தொழிலாளர் சிலரை அழைத்து தனது வீடு மற்றும் காணி என்பவற்றை சுத்தப்படுத்தியும் உள்ளார். அத்துடன் அவரை நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர் ஒருவரும் வீடு சென்று சந்தித்தும் உள்ளார்.

அவ்வாறான நிலையில் இவற்றை அவதானித்த அவ்வூர் வாசிகள் நேற்று முந்தினம் இது தொடர்பாக இலங்கை பொலீஸாரின் அவசர தொலைபேசி இலக்கமான 119 இற்கு அழைத்து தெரியப்படுத்திய போதும் உரிய நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறவில்லை.

அதனை தொடர்ந்து இது தொடர்பாக நேற்றய தினம் வடமாகாண சுகாதார திணைக்களத்தின் பனிப்பாளர் வைத்தியர் R.கேதீஸ்வரன் அவர்களை அவரது கைத்தொலைபேசிக்கு தொடர்புகொண்டு தெரியப்படுத்த முற்பட்ட வேளை இத்தனை நாட்களும் பொறுப்புடன் செயற்பட்ட அதிகாரியாக விபரங்களை கேட்டு தன்கீழ் கடமையாற்றும் அதிகாரிகளுக்கு தெரியபடுத்த முற்படாமல் ‘நான் மாகாண பணிப்பாளர்; அது தொடர்பாக உங்கள் பிரதேச வைத்திய அதிகாரியுடன் தொடர்பு கொள்ளுங்கள்’ என்று கூறி அழைப்பை துண்டித்துள்ளார்.

இச்செயற்பாடு அழைப்பை மேற்கொண்ட நபரை மட்டுமல்லாது அவ்வூர் வாசிகளையும் வேதனைக்கு உட்படுத்தியுள்ளது.

அத்துடன் வைத்தியர் ஒருவரின் தாயாகவும் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மாநகர சபையின் உறுப்பினராகவும் உள்ள குறித்த நபர் இதுவரை தனிமைப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்…

இவ் மாகாண சுகாதார பணிப்பாளரே முன்னர் மத போதகர் ஒருவர் கொரோணாவை பரப்பி விட்டார் என்று ஊடகங்களுக்கு அறிவித்து மக்களிடையே பேதியை உண்டு பண்ணியவர் ஆவார்.

தான் கூறிய கருத்தை உறுதிப்படுத்த பொலீசாருடன் முரண் பட்டவரும் இவரே.

Be the first to comment

Leave a Reply